அடுத்த வாரம் முதல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Pfizer தடுப்பூசிகள் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
அமெரிக்காவின் Michigan மாநிலத்தில் தயாராகும் Pfizer தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. May மாதம் 3ஆம் திகதி முதல் Michigan மாநிலத்தின் உற்பத்தி தளத்திலிருந்து கனடாவுக்கான Pfizer தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்படும் என கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
May மாதத்தின் ஒவ்வொரு வாரமும் 2 மில்லியன் Pfizer தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும் எனவும் இது June மாதத்தில் ஒவ்வொரு வாரமும் 2.4 மில்லியன் தடுப்பூசிகளாக அதிகரிக்கும் எனவும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.