Ontarioவில் சர்வதேச மாணவர்களின் வருகையை நிறுத்துவதை கனடா பரிசீலிக்கலாம் என பிரதமர் கூறினார்.
Ontario முதல்வர் Doug Ford முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து பிரதமர் Justin Trudeau இந்த கருத்தை தெரிவித்தார். முதல்வர் Ford சர்வதேச மாணவர்களின் வருகையை இடைநிறுத்த கோரியுள்ளதாக பிரதமர் Trudeau இவெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இது போன்றதொரு கோரிக்கையை இந்த நேரத்தில் Ontario மாத்திரம் முன் வைத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். தொற்றின் பரவலை குறைக்க மாகாணங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது நோக்கங்களை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எதிராக பிரதமர் Trudeau பொது எச்சரிக்கை ஒன்றையும் விடுத்தார்.