தேசியம்
செய்திகள்

இரண்டு மாதத்திற்குள் கனடா திரும்பிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் COVID தொற்றால் பாதிப்பு!

விடுதிகளில் கட்டாய தனிமைப்படுத்தல்கள் ஆரம்பித்ததில் இருந்து கனடா திரும்பிய இரண்டாயிரத்துக்கும்  மேற்பட்டோர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இவர்களில் கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் தொற்றின் புதிய திரிபுகளில்  ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தால் இந்தத் தரவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. February மாதம் 22ஆம் திகதி முதல்  April மாதம் 11ஆம் திகதி வரையான காலத்தில் கனடா வந்த 2,018 பயணிகள் தொற்றால் பாதிக்கப்பட்டது  சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த எண்ணிக்கை அந்த காலகட்டத்தில் கனடாவிற்கு வருகை தந்தவர்களின் ஒரு சதவீதமானவர்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன.  இந்த நிலையில் புதிய திரிபின் பரவல் கனடாவுக்குள் அதிகரிக்காமல் இருக்க  கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே  இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருந்து கனடா வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா 30 நாள் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Related posts

மீண்டும் அதிகரித்த வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan

பொது சேவை கூட்டணி சமரசத்திற்கு தயாராக வேண்டும்!

Lankathas Pathmanathan

375க்கு மேற்பட்ட கனடியர்கள் சூடானில் இருந்து வெளியேறினர்

Leave a Comment