தேசியம்
செய்திகள்

Ontarioவில் நோய் வாய்ப்பட்ட காலத்திற்கான விடுப்பு ஊதியத் திட்டம் அறிவிப்பு!

COVID தொற்றை கட்டுப்படுத்த நோய் வாய்ப்பட்ட காலத்திற்கான விடுப்பு ஊதிய திட்டம் ஒன்றை Ontario அறிவித்தது.

Ontario COVID தொழிலாளர் வருமான பாதுகாப்பு நன்மை என இந்தத் திட்டம் பெயரிடப்பட்டுள்ளது. புதன்கிழமை தொழிலாளர், பயிற்சி, திறன் மேம்பாட்டு அமைச்சரும் (Minister of Labour, Training and Skills Development Monte McNaughton) நிதி அமைச்சரும் (Minister of Finance Peter Bethlenfalvy) இணைந்து இதற்கான அறிவித்தலை வெளியிட்டனர்.

கடுமையான அழுத்தத்தின் கீழ், Ontario அரசாங்கம் அத்தியாவசிய பணியிடங்களில் தொற்று  பரவுவதை தடுக்க உதவும் வகையில் நோய் வாய்ப்பட்ட காலத்திற்கான விடுப்பு ஊதியத் திட்டத்தை புதன்கிழமை அறிவித்துள்ளது. இதற்கான சட்டமூலம்  நிறைவேற்றப்பட்டால், அத்தியாவசிய ஊழியர்கள் மூன்று தினங்களுக்கு நாளாந்தம் 200 டொலர்கள் வரை பெற தகுதியுடையவர்களாகின்றனர்.


தொழில் நிறுவனங்கள் இந்த தொகையை தகுதியுடைய ஊழியர்களுக்கு வழங்குவார்கள். WSIB எனப்படும் பணியிட பாதுகாப்பு காப்பீடு வாரியத்தின் மூலம் மாகாணத்தால் அது தொழில் நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்தப்படும் என புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.  

Related posts

உக்ரைனில் கண்ணி வெடிகளை அகற்ற கனடிய அரசாங்கம் $15 மில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan

ஆட்சியில் கவனம் செலுத்த உள்ளேன்: Justin Trudeau

Lankathas Pathmanathan

Fiona புயலின் விளைவாக குறைந்தது மூவர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment