December 12, 2024
தேசியம்
கட்டுரைகள்

இன அழிப்புக்கு எதிரான கனடாவின் நிலைப்பாடு!

இன அழிப்புக்கு எதிரியாக கனேடிய நாடாளுமன்றம் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

Uighur இஸ்லாமியர்களைச் சீனா இன அழிப்பு செய்வதாக கனடாவின் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. நாடாளுமன்ற வாக்கெடுப்பை தொடர்ந்து, சீனாவின் நடவடிக்கை இன அழிப்புக்கு ஆனது என்ற தீர்மானம் எடுத்த இரண்டாவது நாடக கனடா திகழ்கிறது. ஆனாலும் இந்தத் தீர்மானத்தை கனேடிய பிரதமர் Justin Trudeau ஆதரிக்கவில்லை எனவும், இந்த செயற்பாட்டினால் இருநாட்டின் நல்லிணக்கமும் பாதிப்படைவதோடு பதற்றநிலை உருவாகக்கூடும் எனவும் கருத்துக்கள் வெளிவருகின்றன.

சீனாவின் வடமேற்கில் உள்ள Xinjiang பகுதியை சேர்ந்த Uighurs இஸ்லாமியர்களுக்கு சீன அரசாங்கம் இளைக்கும் இன்னல்களை அடையாளம் காட்டி, Conservative கட்சியால் முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானத்திற்கு கடந்த (February) மாத இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியிருந்தனர்.

இந்த வாக்கெடுப்பின்போது கனேடியப் பிரதமரும் அவரது அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் Marc Garneau இந்த வாக்கெடுப்பின்போது நாடாளுமன்றத்தில் இருந்தாலும் அவர் வாக்கெடுப்பினைத் தவிர்த்திருந்தார். நாடாளுமன்றத்தில் இருந்த Liberal கட்சியின் ஏனைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் இந்த முடிவிற்கு முன்னர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் Donald Trump, தனது ஆட்சியின் முடிவில் சீனாவின் நடவடிக்கையை இன அழிப்பு என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இங்கிலாந்து நாடாளுமன்றமும் இதைப்போன்ற ஒரு வாக்கெடுப்பினை நடத்தி இருந்தது. ஆனாலும் அந்த வாக்கெடுப்பு தோல்வியினை சந்திக்க நேர்ந்தது.

கனடிய நாடாளுன்றம் பெருவாரியான வாக்குகளால் சீனாவின் இந்த நடவடிக்கையை இன அழிப்பு எனத் தெரிவித்துள்ளது. இந்த வாக்கெடுப்பின் இறுதி முடிவில் 266-0 என்ற விகிதத்தில் தீர்மானம் நிறைவேறியது. இதனை அனைத்து எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் பல ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்துள்ளனர். பிரதமர் Trudeau, அவரது அமைச்சரவையை சேர்ந்து பல உறுப்பினர்களும் இந்த வாக்கெடுப்பினை தவிர்த்தனர்.

இந்த முடிவினை தொடர்ந்து பல அரசியல் மாற்றங்களை பிரதமர் சந்திக்க நேரிடும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் கனடாவிற்கு எதிரான விரோத போக்குகொண்ட நடவடிக்கைகளை எதிர்த்தும் நல்லிணக்க போக்கு கொண்ட முடிவுகளையும் சமநிலையோடு எடுத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் சிறுபான்மை பலம் கொண்ட Trudeau அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்பின் மூலம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் நடவடிக்கைகளை கனடிய எதிர்க் கட்சியினர் இன அழிப்பு என்ற சொல்லின் மூலம் மிகைப்படுத்துவதாகவும் இதனை மேலும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனவும் கூறினர்.

“நாங்கள் இதை உறுதியாக எதிர்க்கிறோம், ஏனெனில் இது உண்மைக்கு எதிரானது. எங்க உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக உள்ளது” எனவும் “Xinjiangகில் இன அழிப்பு எதுவும் நடத்தப்படவில்லை” எனவும் கனடிய சீனத்தூதர் Cong Peiwu கனடிய அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

10 இலட்சத்திற்கும் மேலான Uighur இஸ்லாமியர்களை சீனா முகாமில் அடைத்து வைத்துள்ளதாகவும், அங்கு அவர்கள் கற்பழிப்பு, பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் வந்தவண்ணம் உள்ளன. சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. இவை தொழிற்கல்வி, பயிற்சி மையங்கள் (vocational and educational training centers) என்றும் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகாங்கள் (stamp out extremism) என்றும் சீனா பதிலளித்துள்ளது.

Uighur இஸ்லாமியர்களைச் சீனா நடத்தும் முறை இன அழிப்பு என்பதன் வரைவிலக்கணத்துக்குள் சேரும் என கடந்த October மாதம், கனடாவின் நாடாளுமன்ற துணை குழு தீர்மானித்திருந்தது இங்கு குறிப்பிடப்படவேண்டியது.

அண்மையில் முடிந்த வாக்கெடுப்பின் முடிவு இருநாடுகளுக்கிடையில் பதற்ற சூழலை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. Huawei தலைமை அதிகாரி Meng Wanzhou மீதான பிடி ஆணையை தொடர்ந்து 2018ஆம் ஆண்டின் இறுதியில் அவரை அமெரிக்காவின் சார்பாக கனடாவில் கைது செய்தது சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தியது.

இந்தக் கைதின் எதிரொலியாக கனடியர்களான Michael Kovrig, Michael Spavor ஆகியோரை சீனா பிணைக் கைதிகள் ஆக்கியது. சீனாவின் இந்த நகர்வை பணயக் கைதிகள் இராஜதந்திரம் (hostage diplomacy) என கனடிய அரசு வகைப்படுத்தி விமர்சித்திருந்ததும் இங்கு குறிப்பிடப்படவேண்டியது.

  • ரம்யா சேது

(தேசியம் சஞ்சிகையின் March 2021 பதிப்பில் வெளியான கட்டுரை)

Related posts

நீங்கள் போதிப்பதை கொஞ்சம் பயிற்சியும் செய்து பாருங்கள்!

Gaya Raja

மனைவியை ‘கோழைத்தனமாக’ கொலை புரிந்த; தமிழரான கணவருக்கு 9 1/2 ஆண்டு சிறை!!

Gaya Raja

கனடாவில் அவசர காலச் சட்டம்: “இது தகுமோ.. முறையோ.. தர்மம் தானோ…?”

Lankathas Pathmanathan

Leave a Comment