தேசியம்
கட்டுரைகள்

2021 Ontario மாகாண வரவு செலவு திட்டம் – ஒரு பார்வை

Ontario மாகாண நிதி அமைச்சர் Peter Bethlenfalvy, March மாதம் 24ஆம் திகதி வரவு செலவு திட்டம் ஒன்றை சமர்ப்பித்தார். Bethlenfalvy கடந்த December மாதம் புதிய நிதி அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் சமர்ப்பிக்கும் முதலாவது வரவு செலவு திட்டம் இதுவாகும்.

COVID தொற்றில் இருந்து மீள்வதில் இந்த வரவு செலவு திட்டம் அதிக கவனம் செலுத்தும் என்பதை முன்னரே Doug Ford அரசாங்கம் தெளிவாக அடையாளம் காட்டியது. எதிர்பார்த்தபடி, 2021 வரவு செலவு திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – மாறாக தனிநபர்களை ஆதரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. அதேபோல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வணிகங்களையும் இந்த வரவு செலவு திட்டம் ஆதரவளிக்கிறது.

Ontario அரசாங்கம் 2021–22 நிதி ஆண்டில் 173 பில்லியன் டொலர்களை செலவழிக்க திட்டமிட்டுள்ளது. இது COVID பரவலுக்கு முந்தைய வருட (2018-2019) செலவினங்களுடன் ஒப்பிடும்போது 148.8 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை ஆகும். மறுபுறம், வரவு செலவு திட்டத்தின் நிதி சாளரத்தின் மீது, அரசாங்க வருவாய் 2019-20 ஆம் ஆண்டில் 156.1 பில்லியனில் இருந்து 167.0 ஆக 2023-24 ஆண்டில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தொற்று செலவு காரணமாக பற்றாக்குறை பதிவாகியுள்ளது. 2020–21 ஆண்டுக்கு, அரசாங்கம் 38.5 பில்லியன் டொலர் பற்றாக்குறையை முன்வைக்கிறது.

2020இல் Ontarioவின் பொருளாதாரம் தொடர்ந்து இரண்டு காலாண்டுகள் சரிவாக 1.8 சதவீதம் மற்றும் 12.2 சதவீதம் பதிவு செய்தது. ஆனாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றாம் காலாண்டில் 9.4 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்னோக்கிச் செல்லும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி 2021இல் 4.0 சதவீதமாகவும், 2022இல் 4.3 சதவீதமாகவும், 2023இல் 2.5 சதவீதமாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் 2024இல் 2.0 சதவீதம் ஆகலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Ontario இந்த ஆண்டு 829,400 வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. ஆனால் தொற்றின் முன்னரான காலப்பகுதியை எட்டுவதற்கு 305,300 வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டி உள்ளது.

2021 வரவு செலவு திட்டம் இந்த விடயத்திலும் கவனம் செலுத்தும் என நிதி அமைச்சர் அறிவித்தார். 2021 வரவு செலவு திட்டத்தின் மையப்பகுதி சுகாதார செலவினம் ஆகும். COVID தொற்றை எதிர்கொள்ள அறிவிக்கப்பட்ட முதலீடுகளில் 16.3 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் PPE எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 1.4 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 1.8 பில்லியன் டொலர்கள் மருத்துவமனையின் தற்போதைய தேவைக்கும், 2021-22இல் நீண்டகால பராமரிப்புக்காக 650 மில்லியன் டொலர்களும், அடுத்த நான்கு ஆண்டுகளில் மேலதிகமாக நீண்ட கால பராமரிப்பு இல்லங்களுக்கு உதவும் வகையில் 933 மில்லியன் டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டின் June மாத இறுதிவரை இடைநிலைக் கல்வியில் ஆராய்ச்சியை ஆதரிக்க 500 மில்லியன் டொலர்களும், 175 மில்லியன் டொலர்கள் மன ஆரோக்கிய திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த வரவு செலவு திட்டம் COVID தொற்றில் இருந்து பொருளாதார மீட்டெடுப்பை ஆதரிக்கிறது. 2021 ஆம் ஆண்டிற்கான ஒரு புதிய Ontario வேலைவாய்ப்பு பயிற்சி வரிக் கடன் (Ontario Jobs Training Tax Credit), 50 சதவீத தகுதிச் செலவுகளுக்கு ஒரு பெறுநருக்கு 2,000 டொலர்கள் வரை வழங்கும். இந்த கடன் 2021ஆம் ஆண்டில் சுமார் 230,000 தொழிலாளர்களுக்கு 260 மில்லியன் டொலர்கள் வரை வழங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகங்களுக்கு உதவ, அரசாங்கம் Ontario சிறு வணிக ஆதரவு மானியக் கொடுப்பனவுகளை (Ontario Small Business Support Grant Payments) இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் சுற்றில் பணம் பெற்றவர்களின் வங்கிக் கணக்குகளில் மீண்டும் அதே தொகை பணம் வைப்பிலிடப்படும்.

இந்த வரவு செலவு திட்டத்தை எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. பிரதான எதிர்க்கட்சியான புதிய ஜனநாயக கட்சியின் (NDP) தலைவி Andrea Horwath” Doug Ford தொழிலாளர்களுக்கு முதலீடு செய்வதை நம்பவில்லை. அவர் உழைக்கும் மக்களுக்கு பணத்தை செலவழிக்க விரும்பவில்லை “என விமர்சித்தார். Liberal கட்சியின் தலைவர் Steve Del Duca, பசுமை கட்சியின் தலைவர் Michael Schreiner ஆகியோர் இந்த வரவு செலவு
திட்டம் பொருளாதாரத்தை மேம்படுத்தாது என தமது பங்கிற்கு விமர்சித்தனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான ஒரு வழி வரவு செலவு திட்டமாகும். இந்த வரவு செலவு திட்டம் தொற்றின் போது Ford அரசாங்கத்தின் முன்னுரிமைகள் எது என்பதை கோடிட்டு கட்டியுள்ளது. குறிப்பாக சிறு வணிகங்களில் ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்தி பொருளாதாரத்தை மீள ஆரம்பிக்க உதவும் வகையில்
திட்டங்களை நிதி அமைச்சர் Bethlenfalvy அறிவித்துள்ளார்.

இந்த வரவு செலவு திட்டம் செலவினங்களை அதிகரிக்கவும், சேமிப்பை ஊக்குவிக்கவும் அரசாங்கம் ஏற்பாடுகளை செய்வதை சுட்டிக்காட்டுகிறது. இது மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத் துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது Ford அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

  • ரம்யா சேது

(தேசியம் சஞ்சிகையின் March 2021 பதிப்பில் வெளியான கட்டுரை)

Related posts

Toronto இடைத்தேர்தல் Justin Trudeauவின் அரசியல் எதிர்காலத்திற்கான வாக்கெடுப்பு?

Lankathas Pathmanathan

Ontario தேர்தல் வெல்லப்போவது எங்கே?

Lankathas Pathmanathan

கனடாவின் அதிக செலவு செய்யப்படும் தேர்தல்!

Gaya Raja

Leave a Comment