தேசியம்
செய்திகள்

Ontarioவில் இருவர் AstraZeneca தடுப்பூசியால் ஏற்பட்ட இரத்த உறைவால் பாதிக்கப்பட்டனர்!

AstraZeneca தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்பட்ட இரண்டு நபர்கள் Ontarioவில் அடையாளம் காணப்பட்டனர்.  

60 வயதான இருவரே, AstraZeneca தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக Ontario மாகாணம் அறிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் Hamilton நகரை சேர்ந்தவர் என தெரியவருகின்றது.

ஆனாலும்  AstraZeneca தடுப்பூசியின் நன்மைகள் COVID தொற்றால் பாதிக்கப்படுவதை விட அதிகமாக இருப்பதாக Health கனடா தொடர்ந்தும் பரிந்துரைக்கின்றது.18 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை  பயன்படுத்த Health கனடா ஒப்புதல் அளித்தது. இந்த வார ஆரம்பத்தில், Ontario அரசாங்கம் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசியை  வழங்க ஆரம்பித்தது.

Related posts

Funny Boy திரைப்படம் – Oscar விருதுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை தவறவிட்டது

Gaya Raja

மீண்டும் கடும் பனிப் பொழிவை எதிர்கொள்ளும் தெற்கு Ontario

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தில் வாகனம் மோதியதில் இருவர் பலி – ஒன்பது பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment