கனடாவின் 7 நாள் சராசரி COVID தொற்றின் எண்ணிக்கை 8,200ஐ தாண்டியுள்ளது.
இது தொற்றின் பரவல் மோசமடைய போகிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். தொற்றின் புதிய திரிபின் மாறுபாடுகளின் பரவல்,மாகாணங்கள் மிக விரைவாக மீண்டும் திறக்கப்படும் நிலை, இரண்டாவது அலையில் இருந்து மருத்துவமனைகள் மீண்டு வராத நிலை ஆகியவை இதற்கான காரணிகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
January மாதத்தின் பின்னர் கனடா கடந்த இரண்டு வாரங்களாக மிக அதிகரித்த தொற்றுக்களின் எண்ணிக்கையை பதிவு செய்கிறது. கடந்த வியாழக்கிழமை, கனடாவில் 9,569 புதிய தொற்றுக்கள் பதிவாகின. இது தொற்றின் ஆரம்பத்தில் இருந்து பதிவான ஒரு நாளுக்கான அதிக எண்ணிக்கையிலான தொற்றுக்களின் பதிவாகும்.