Ontario மாகாணத்தில் வியாழக்கிழமை 4,700க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின.
தொற்றின் ஆரம்பத்தின் பின்னர் வியாழக்கிழமை Ontario முதல் தடவையாக 4,700க்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவு செய்துள்ளது. சுகாதார அதிகாரிகள் 4,736 தொற்றுக்களையும் 29 மரணங்களையும் பதிவு செய்தனர். இதன் மூலம் Ontarioவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியுள்ளது.
Ontarioவில் தொற்று எண்ணிக்கையின் ஏழு நாள் சராசரி இப்போது 4,208 ஆக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இந்த நோய்க்கு சிகிச்சையளிக்கபடுபவர்களின் எண்ணிக்கையும் முதல் முறையாக 650ஐ தாண்டியுள்ளது. Ontario மாகாணத்தைப் பொறுத்தவரை, மருத்துவமனைகளில் 1,932 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குறைந்தது 659 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 442 பேர் ventilatorரின் உதவியுடன் சுவாசிக்கின்றனர் என வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன.