சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கு எதிரான மீறல்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் மிகைப்படுத்துவதாக கனடாவுக்கான சீனாவின் தூதர் தெரிவித்தார்.
இந்த இரண்டு கனேடியர்களிடம் சீனா தவறாக நடந்து கொண்டதையும் அவர் மறுத்துள்ளார். Michael Spavor, Michael Kovrig ஆகிய கனடியர்கள் இருவரும் 2018ஆம் ஆண்டு December மாதம் சீனாவில் கைது செய்யப்பட்டனர்
ஒரு நாட்டின் இரகசியங்களை சேகரித்து வெளிநாடுகளுக்கு கசிய விட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றங்களுக்காக இவர்கள் இருவரும் சீனாவில் விசாரணையை எதிர்கொள்வதாகவும் கனடாவுக்கான சீனாவின் தூதர் கூறினார்