Liberal கட்சியில் மூன்று நாள் தேசிய மாநாடு பிரதமர் Justin Trudeauவின் உரையுடன் சனிக்கிழமை முடிவடைந்தது.
ஒரு தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தது போன்ற தொனியில் பிரதமர் தனது உரையை ஆற்றினார். COVID தொற்றின் மூன்றாவது அலையின் மத்தியில் நாட்டை தேர்தலில் மூழ்கடிப்பதில் தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என பிரதமர் தனது உரையில் வலியுறுத்தினார்.
ஆனாலும் கனடியர்கள் எதிர்கொள்ளும் “உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக்” கொண்ட ஒரே கட்சியாக ஆளும் Liberal கட்சியே உள்ளதாக பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சியாக பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சியை தனதுரையில் பிரதமர் வர்ணித்தார்.
Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்க ஒரு வார காலம் உள்ள நிலையில் Liberal கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று முடிந்தது. பிரதான எதிர்க்கட்சிகள் மூன்று இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தால், அரசாங்கம் தோற்கடிக்கப்படும். ஆனால் COVID தொற்றின் போது தனது கட்சி ஒரு தேர்தலை தூண்டாது என NDP தலைவர் Jagmeet Singh உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.