Quebec மாகாணத்தில் Quebec City, Lévis, Beauce, Gatineau ஆகிய நான்கு பகுதிகளில் ஏற்கனவே அமுலில் உள்ள முடக்க நடவடிக்கைகள் தொடரவுள்ளது.
தொடரும் COVID தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நகர்வு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதேவேளை Montrealலிலும் Lavalலிலும் இரவு 8 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த அறிவித்தல்களை வியாழக்கிழமை மாலை Quebec முதல்வர் François Legault வெளியிட்டார். இந்தப் புதிய நடவடிக்கைகள் April மாதம் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.