Toronto கல்விச் சபையின் பாடசாலைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.அதிகரித்து வரும் COVID தொற்று காரணமாக இந்த அறிவித்தல் வெளியானது. புதன்கிழமை முதல் April மாதம் 18ஆம் திகதி வரை நேரடி கல்விக்கு பாடசாலைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Torontoவின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் Eileen de Villa இந்த உத்தரவை விடுத்தார்.சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு சட்டத்தின் பிரிவு 22ன் கீழ் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
Peel பிராந்திய பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடும் உத்தரவு விடுக்கப்பட்டது. Ontario மாகாண அரசாங்கம் பாடசாலைகள் திறந்திருப்பது பாதுகாப்பானது என அறிவித்த போதிலும் அவற்றை மூடி இணையம் மூல கற்றலுக்கு மாற Toronto நகரமும் Peel பிராந்தியமும் முடிவு செய்துள்ளன.