கனடாவில் குழந்தைகளுக்கு வழங்கப்படக்கூடிய முதலாவது COVID தடுப்பூசியாக Pfizerரின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Health கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் Supriya Sharma நேற்று புதன்கிழமை இந்த கருத்தை தெரிவித்தார். ஏனைய தடுப்பூசிகள் குழந்தைகள் மீதான சோதனைகளின் முடிவுகளை இன்னும் அறிவிக்காத நிலையில் கனடாவில் குழந்தைகளுக்கு வழங்கும் தகுதி பெறும் முதல் தடுப்பூசியாக Pfizer இருக்கலாம் என Sharma கூறினார்
இளைய பதின்ம வயதினர் குறித்த Pfizerரின் தடுப்பூசியின் தரவை இரண்டு வாரங்களில் Health கனடா மதிப்பாய்வு செய்யும் எனவும் Sharma மேலும் கூறினார்.