Ontario சுகாதார அமைச்சர் Christine Elliott, COVID தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.
தடுப்பூசி குறித்த தயக்கத்தை நீக்கும் வகையில் AstraZeneca தடுப்பூசியை அமைச்சர் Elliott தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பில் நேற்று திங்கட்கிழமை தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.
தடுப்பூசிகளை பெறுவது குறித்த தயக்கத்தை நீக்கும் வகையில் AstraZeneca தடுப்பூசியை பகிரங்கமாகப் பெறவுள்ளதாக Ontario மாகாண சுகாதார அமைச்சர் கடந்த வாரமே அறிவித்திருந்தார்.
Quebecகின் சுகாதார அமைச்சர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் AstraZeneca தடுப்பூசியை பகிரங்கமாக பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.