September 18, 2024
தேசியம்
செய்திகள்

தடுப்பூசியை பெற்றுக் கொண்ட Ontario சுகாதார அமைச்சர்

Ontario சுகாதார அமைச்சர் Christine Elliott, COVID தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.

தடுப்பூசி குறித்த தயக்கத்தை நீக்கும் வகையில் AstraZeneca தடுப்பூசியை அமைச்சர் Elliott தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பில் நேற்று திங்கட்கிழமை தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.

தடுப்பூசிகளை பெறுவது குறித்த தயக்கத்தை நீக்கும் வகையில் AstraZeneca தடுப்பூசியை பகிரங்கமாகப் பெறவுள்ளதாக Ontario மாகாண சுகாதார அமைச்சர் கடந்த வாரமே அறிவித்திருந்தார்.

Quebecகின் சுகாதார அமைச்சர்  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர்  AstraZeneca தடுப்பூசியை பகிரங்கமாக பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மேற்கு Ottawa வெடிப்புச் சம்பவங்களில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

ரஷ்யா, ஈரான், மியான்மர் ஆட்சியாளர்கள் மீது புதிய தடை

Lankathas Pathmanathan

LCBO நிறுவனம் விற்பனை செய்யப்படாது: முதல்வர் Doug Ford

Lankathas Pathmanathan

Leave a Comment