தேசியம்
செய்திகள்

தடுப்பூசிகளின் கட்டுப்பாடுகள் குறித்து கனடிய பிரதமர் கவலை

COVID தடுப்பூசிகளின்  கட்டுப்பாடுகள் குறித்து கனடிய பிரதமர் கவலை தெரிவித்துள்ளார். ஆனாலும் இதனால்  கனடா பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என பிரதமர் Justin Trudeau நாடாளுமன்றத்தில் கூறினார்.

புதன்கிழமை நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார விமர்சகருமான Michelle Rempel Garner முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

உள்நாட்டு நோய்த் தடுப்பு பிரச்சாரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கனடாவுக்கான தடுப்பூசி விநியோகம் தடுத்து நிறுத்தப்படும் என பிரதமர் தனது பதிலில் கவலை தெரிவித்தார். ஆனாலும் இதனால் கனடாவின் தடுப்பூசி விநியோகம் பாதிக்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை என பிரதமர் Trudeau கூறினார்.

இந்த விடயத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் உயர்ந்த மட்டங்களுக்கு தான் நேரடி தொடர்புகளை பேணி கனடாவுக்கான தடுப்பூசி விநியோகத்தை  உறுதி செய்யவு ள்ளதாகவும் பிரதமர் Trudeau தெரிவித்தார். 

Related posts

உக்ரைனில் ரஷ்யா வாக்கெடுப்பு முடிவுகளை கனடா அங்கீகரிக்காது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

ஒரு மாதத்தில் அதிக தொற்றுக்களை Ontario பதிவு செய்தது!

Gaya Raja

Moderna தடுப்பூசி விநியோகங்களில் மேலும் தாமதம்

Lankathas Pathmanathan

Leave a Comment