Ontario மாகாணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக 1,700க்கும் அதிகமான COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளது.
மாகாண சுகாதார அதிகாரிகள் நேற்று 1,791 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர். Ontarioவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை 1,829 தொற்றுக்களும், வெள்ளிக்கிழமை 1,745 தொற்றுக்களும் பதிவாகியிருந்தன. கடந்த மூன்று நாட்களில் பதிவான தொற்றுக்களின் எண்கள் வியாழக்கிழமை பதிவான 1,553 தொற்றுக்களிலிருந்தும், புதன்கிழமை பதிவு செய்யப்பட்ட 1,508 தொற்றுக்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
பதிவு செய்யப்பட்ட தொற்றுக்களின் எண்ணிக்கையின் மாகாணத்தின் 7 நாள் சராசரி இப்போது 1,538 ஆக உள்ளது – இது ஒரு வாரத்திற்கு முன்பு 1,401 ஆக இருந்தது. 49,000 COVID சோதனைகள் முடிந்த நிலையில், Ontario சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை மாகாணத்தின் நேர்மறை விகிதம் இப்போது 3.7 சதவீதமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தொற்றின் காரணமாக Ontarioவில் மேலும் 18 பேர் இறந்துள்ளதாகவும், இதில் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் இரண்டு பேரும் அடங்குவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தத்தில், தொற்றுடன் தொடர்புடைய 7,241 மரணங்களை மாகாணம் தொற்றின் ஆரம்பத்திலிருந்து எதிர்கொண்டுள்ளது.
தொற்றின் காரணமாக தற்போது 765 பேர் மருத்துவமனையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் 302 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 189 பேர் ventilatorரின் உதவியுடன் சுவாசிக்கும் நிலை Ontarioவில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.