கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணக் கட்டுப்பாடுகள் April மாதம் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
நில எல்லை கட்டுப்பாடுகள் குறைந்தது ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று வியாழக்கிழமை கனேடிய பிரதமர் Justin Trudeau அறிவித்தார். COVID தொற்றின் பரவலைத் தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்
கனேடியர்களை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளதாகவும் பிரதமர் Trudeau கூறினார்.