Funny Boy திரைப்படம் 93ஆவது சர்வதேச Oscar விருதுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலில் எந்தத் துறையிலும் தெரிவாகத் தவறியுள்ளது.இந்திய – கனடிய இயக் குனர் தீபா மேத்தா இயக்கத்தில் இலங்கை – கனடிய எழுத்தாளர் ஷியாம் செல்லத் துரையின் Funny Boy திரைப்படம் கனடாவில் தயாரானது.
முதலில் Funny Boy திரைப்படம் Oscar விருதிற்காக வெளிநாட்டு படங்கள் பட்டியலில் கனடாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அதில் போதியளவு தமிழ் மொழி பிரயோகிக்கப்படவில்லை எனத் தெரிவித்த தெரிவுக்குழு அதனை நிராகரித்திருந்தது. இதனால் திரைப்பட குழு Oscar விருதுக்காக பொதுவான நிலையில் Funny Boy திரைப்படத்தை பரிந்துரைத்தது.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை Oscar விருதிற்கான 23 துறைகளிலான திரைப்படங்களின் இறுதித்தேர்வுப் பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு ள்ளது. இந்தப் பட்டியலில் Funny Boy திரைப்படம் எந்தத் துறையின் இறுதிப் பட்டிய லிலும் தெரிவாகவில்லை. 93ஆவது Oscar விருது வழக்கும்நிகழ்வு April மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.