AstraZeneca தடுப்பூசி பாவனைக்கு பாதுகாப்பானது என கனடிய பிரதமர் Justin Trudeau நேற்று உறுதியளித்தார்.ஐரோப்பிய நாடுகள் பல AstraZeneca தடுப்பூசியின் பயன் பாட்டை நிறுத்தியுள்ள நிலையில் பிரதமரின் இந்த உறுதிப்பாடு வெளியானது.
Health கனடா கட்டுப்பாட்டாளர்கள் தடுப்பூசிகள் குறித்த அனைத்து தகவல்களையும் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்கனடாவில் இதன் பயன்பாட்டை Health கனடா பாதுகாப்பானது உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் Trudeau கூறினார்.