தடுப்பூசிகளின் வழங்கலும் தொற்றின் எண்ணிக்கையும் மீண்டும் எப்போது கனடிய அமெரிக்க எல்லை திறக்கப்படும் என்பதை தீர்மானிக்கும் என கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
கனடியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை எல்லையை மீண்டும் திறக்கும் எண்ணம் இல்லை எனவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று தெரிவித்தார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட எல்லையை மீண்டும் திறக்க செப்டெம்பர் வரையோ அல்லது அதற்கு பின்னரோ காத்திருக்கத் தயாராகவுள்ளதாகவும் இன்று பிரதமர் கூறினார்.
கனடியர்களின் பாதுகாப்பை முதல்மையாகக் கொண்டு எப்போது கட்டுப்பாடுகளை தளர்த்த ஆரம்பிக்க முடியும் என்பது குறித்து நிபுணர்களிடம் ஆலோசிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மாதாந்த அடிப்படையில் புதுப்பிக்கப்படும் எல்லை மூடல் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.