December 12, 2024
தேசியம்
இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

தமிழ் இனப்படுகொலை மசோதாவுக்கான Ontario முதல்வரின் ஆதரவைக் கோர ஆயிரம் டொலர் நன்கொடை வழங்கவும்! விஜய் தணிகாசலம் சார்பில் அழைப்பு

தமிழ் இனப்படுகொலை மசோதாவிற்கான – Bill 104, Tamil Genocide Education Week Act, 2019 – Ontario மாகாண முதல்வரின் ஆதரவைப் பணம் கொடுத்து வாங்க முடியுமா? அல்லது வாங்க வேண்டுமா?

அதனைத்தான் செய்யுமாறு தமிழ் மக்களிடம் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் சார்பில் ஒரு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (வியாழன் – March 11) Ontario மாகாண முதல்வர் Doug Fordஉடன் ஒரு சந்திப்பை மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் ஒழுங்கு செய்துள்ளார். An Intimate Conversation with PC Leader Doug Ford, hosted by Vijay Thanigasalam, MPP என Ontario PC கட்சியினால் அறிவிக்கப்படும் இந்த ஒரு மணிநேர மெய்நிகர் நிகழ்வுக்காக கட்டணச் சீட்டொன்றின் விலை ஆயிரம் டொலர்கள்.

இவ்வாறான நிகழ்வுகளை நிதி சேகரிப்பாக கட்சிகள் நடத்துவது வழமை – ஆனால் குறிப்பிட்ட இந்த நிகழ்வுக்கு தமிழர்கள் மத்தியில் விடுக்கப்படும் அறிவித்தல் தான் பல விடயங்களை சிந்திக்க வைக்கின்றது.

Scarborough-Rouge Park தொகுதியின் தமிழ் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் சார்பிலான அந்த அறிவித்தல்/அழைப்பு இதுதான்.

அதாவது முதல்வருக்கு நிதி சேகரித்து கொடுப்பதன் மூலம் தமிழ் இனப்படுகொலை மசோதாவை – Tamil Genocide Bill – வெற்றியடையச் செய்யமுடியுமாம் – செய்ய வேண்டுமாம்.

தவிரவும் இது தமிழ் சமூகத்திற்கு நீண்ட காலத்திற்கு உதவுமாம் – அதாவது ஆயிரம் டொலர்கள் கொடுத்து எங்களது ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம், தமிழ் இனப்படுகொலை மசோதாவை நிறைவேற்ற (முதல்வரை) நாம் வலியுறுத்தலாமாம் – This will help the Tamil community in a long run.  If we show our appreciation then we can push to pass the Tamil genocide bill.

இது ஒருவகையான மறைமுக  இலஞ்சம் இல்லையா?

Isn’t this a form of indirect bribery?

அப்படி என்றால் இதுவரை காலமும் முதல்வர் Ford தமிழரின் நண்பன் என விட்டதெல்லாம் வெறும் கதைதானா? – அண்மையில் கூட தெரிவு செய்யப்பட்ட தமிழ் “ஊடகங்களும்”  – “ஊடகவியலாளர்களும்” மாத்திரம் அழைக்கப்பட்டு – முதல்வர் Ford தமிழ் இனப்படுகொலை மசோதாவை ஆதரிப்பேன் எனக்கூறிய ஒரு ஒளிநாடா புயலாக பகிரப்பட்டது  எல்லாம் வெறும் கண்துடைப்பு தானா?

ஆயிரம் டொலர் நன்கொடை கொடுத்துத் தான் தமிழ் இனப்படுகொலை மசோதாவுக்கான ஆதரவு குறித்து Ontario மாகாண முதல்வரிடம் கோர முடியுமானால் – ஏன் இரண்டு தமிழ் மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்து சட்ட சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும்?

முதல்வர் என்பவர் தான் பிரதி நிதித்துவப்படுத்தும் பகுதியின் அனைத்து (தனக்கு வாக்களித்த – வாக்காளிக்காத) மக்களின் நன்மைக்காகவும் கோரிக்கைக்காகவும் செயல்பட வேண்டியவர் அல்லவா?

(மசோதாவை ஆதரிப்பதற்கு பணம் கேட்கும்) இந்த விடயம் முதல்வருக்கோ அல்லது முதல்வர் அலுவலகத்துக்கோ தெரிந்துதான் நடைபெறுகின்றதா?

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன்றும் நிகழ்த்தப்படும் இனப்படுகொலையை இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் உங்கள் அரசியல் இலாபத்திற்கு  உபயோகிக்க போகின்றீர்கள்?

இதுபோன்ற நகர்வுகள் ஆபத்தானவை – தமிழர்கள் கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினருடனும் செயல்படவேண்டும் என்பது யதார்த்தமானது – ஆனாலும் ஒருவர் தனது அரசியல் எதிர்காலத்துக்காகவும் முதல்வரிடம் நற்பெயர் பெறுவதற்காகவும் தமிழ் இனப்படுகொலை என்ற துருப்புச்சீட்டை  இன்னும் எத்தனை காலத்துக்கு உபயோகிக்கப் போகின்றீர்கள்?

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

அடுத்த தேர்தலில் போட்டியிடாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Gaya Raja

காக்க காக்க “தெருவிழாவை” காக்க!

Lankathas Pathmanathan

Julie Payette என்னும் வேதனையளிக்கும் பாடம் தலைவர்களின் தற்குறிப்பு களையல்ல – பண்புகளைப் பாருங்கள்

Gaya Raja

Leave a Comment