இலங்கையில் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வது குறித்த கனடா தனது கவலையை வெளியிட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய கனடிய வெளியுறவு அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் Rob Oliphant இன்று இந்தக் கவலையை வெளியிட்டார்.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையை வரவேற்பதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். 30/1 தீர்மானத்திற்கான ஆதரவை மீளப் பெறும் இலங்கை அரசின் முடிவு வருத்தமளிக்கின்றது எனவும் Oliphant இன்று கூறினார்.