December 12, 2024
தேசியம்
செய்திகள்

March மாதம் Moderna, 1.3 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பி வைக்கும்: பிரதமர் Trudeau

March மாதம் Moderna, 1.3 மில்லியன் COVID தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பி வைக்கும் என கனடிய பிரதமர் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் கேள்வி நேரத்தின் போது பிரதமர் Justin Trudeau இந்தத் தகவலை வெளியிட்டார். இதன் மூலம் March மாத இறுதிக்குள் 2 மில்லியன் 9 தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை Moderna  நிறைவேற்றும் என பிரதமர்  உறுதிப்படுத்தினார். இவற்றில் 4 இலட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் March 8ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்திலும் 8 இலட்சத்து 40 ஆயிரம் March 22ஆம் திகதி ஆரம்பமாகும்  வாரத்திலும் கனடாவை வந்தடையும் என பிரதமர் கூறினார்.

ஏற்கனவே 5 இலட்சத்து 18 ஆயிரம் தடுப்பூசிகள் கனடியர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1  இலட்சத்து 68 ஆயிரம் தடுப்பூசிகள் இந்த வாரம் கனடாவை வந்தடையவுள்ளன.

இதேவேளை March மாத இறுதிக்குள் Pfizer 4 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பி வைக்கும் என ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts

நாடாளுமன்றத்தை அவசரகால நிலையில் மீண்டும் கூட்ட வேண்டும்: பசுமை கட்சியின் தலைவி வலியுறுத்தல்!

Gaya Raja

உக்ரைனில் ரஷ்யா வாக்கெடுப்பு முடிவுகளை கனடா அங்கீகரிக்காது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Pfizer தடுப்பூசிகளை வழங்கி உதவுங்கள்: அமெரிக்காவிடம் கனடா கையேந்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment