தேசியம்
செய்திகள்

COVID தொற்றின் புதிய மாறுபாடுகள் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என எச்சரிக்கை!

COVID தொற்றின் புதிய மாறுபாடுகள் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என எச்சரிக்கப்படுகின்றது.

இன்று (வெள்ளி) வெளியான கனடிய பொது சுகாதார அமைப்பின்  புதிய modelling தரவுகள் மூலம் இந்த தகவல் வெளியானது. கனடாவின் பொது சுகாதார அமைப்பின் புதிய தொற்று திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam, துணை தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Howard Njoo ஆகியோர் இந்த விபரங்களை இன்று வெளியிட்டனர். COVID தொற்றுக்கள்  கனடா முழுவதும் தொடர்ந்து பரவி வருவதால், நாடு முழுவதும் தொற்று  மீண்டும் எழுச்சி பெறுவதை தடுக்க தற்போதைய பொது சுகாதார நடவடிக்கைகள் கூட போதுமானதாக இருக்காது என்பதை  தேசிய modelling தரவுகள் காட்டுகின்றது.

கனடாவில் ஒப்பீட்டளவில் குறைவானவர்கள்  இதுவரையில் தடுப்பூசியை பெற்றுள்ள நிலையில் கனடியர்கள்  விழிப்புடன் இருக்க வேண்டும் என தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Tam கூறினார்

இந்த நிலையில் நூறாயிரக்கணக்கான COVID தடுப்பூசிகள் வாராந்தம் கனடாவை வந்தடையும் என இன்று பிரதமர்  Justin Trudeau கூறினார்.

Related posts

Torontoவில் தமிழர்களின் திரையரங்கில் தீ?

Lankathas Pathmanathan

கனடா தொற்று எண்ணிக்கையில் ஒற்றை நாள் சாதனையை வியாழக்கிழமை பதிவு செய்தது

Gaya Raja

Manitoba முன்னாள் முதல்வரின் தொகுதிக்கான இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment