December 12, 2024
தேசியம்
செய்திகள்

June மாத இறுதிக்குள் 24.5 மில்லியன் கனடியர்களுக்கு முழுமையாக தடுப்பூசியை வழங்க முடியும்

June மாதத்திற்குள் 14.5 மில்லியன் கனடியர்கள் COVID தடுப்பூசியை பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது

இன்று (வியாழன்) வெளியான கனடிய அரசின் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசி காலவரிசை பட்டியில் மூலம் இந்தத் தகவல் வெளியானது. Health கனடாவினால் அங்கீகரிக்கப்பட்ட Pfizer, Moderna தடுப்பூசிகள் மூலம் June இறுதிக்குள் 14.5 மில்லியன் கனடியர்கள் தடுப்பூசிகளை பெறுவார்கள் என கூறப்படுகின்றது. Health கனடாவால் கூடுதல் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டால், June மாத இறுதிக்குள் தடுப்பூசி பெறக்கூடிய கனடியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது Health கனடாவின் மதிப்பாய்வில் உள்ள நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால், June மாத இறுதிக்குள் 24.5 மில்லியன் கனடியர்களுக்கு முழுமையாக தடுப்பூசியை வழங்க முடியும் எனவும் தெரியவருகின்றது.

Related posts

கட்டாய தடுப்பூசி கொள்கைகள் : பிரதான இரண்டு கட்சிகளின் வேறுபட்ட நிலைப்பாடுகள்!

Gaya Raja

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் தாமதங்கள்

Lankathas Pathmanathan

காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment