Ontario மாகாணத்தின் பெரும்பகுதிக்கு வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இன்று (திங்கள்) முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார். Ontarioவில் அமுலில் உள்ள அவசரகால நிலை செவ்வாய்க்கிழமை நள்ளிரவைத் தாண்டி காலாவதியாகவுள்ளதாகவும் முதல்வர் Ford கூறினார்.
Ontarioவில் அமுலில் உள்ள COVID கட்டுப்பாடுகள், இந்த வாரம் முதல், பகுதி பகுதியாக, பிராந்திய அடிப்படையில் தளர்த்தப்படவுள்ளதாகவும் முதல்வர் கூறினார். எதிர்வரும் புதன்கிழமை முதல் கிழக்கு Ontarioவின் 3 பிராந்தியங்களில், வீடுகளில் இருக்க வலியுறுத்தும் உத்தரவு இரத்து செய்யப்படவுள்ளது. ஏனைய 28 பிராந்தியங்களில் எதிர்வரும் 16ஆம் திகதியும், Toronto, Peel, York பிராந்தியங்களில் 22ஆம் திகதியும், இந்த உத்தரவு நிறைவுக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் Alberta, Quebec, Nova Scotia ஆகிய மாகாணங்களில் இன்று சில COVID கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன.