சில COVID கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக இன்று (செவ்வாய்) Quebec முதல்வர் அறிவித்தார்.
சமீபத்திய வாரங்களில் நிலைமை மேம்பட்டுள்ளதாக முதல்வர் François Legault இன்று கூறினார். இதனால் படிப்படியாக சில தளர்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனாலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என முதல்வர் கூறினார். தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளாந்த தொற்றுக்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துவரும் நிலையில் இன்றைய அறிவித்தல் வெளியானது.