கனடாவுக்கான COVID தடுப்பூசி விநியோகத்தில் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.
ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என அச்சுறுத்தல்கள் வெளியாகும் நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் நிலைமை கவலைக்குரியது என கூறிய பிரதமர், கனடா March மாத இறுதிக்குள் வாக்குறுதியளித்த அனைத்து தடுப்பூசிகளையும் பெறும் என நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்தார்.
இந்த மாதம் Pfizer தடுப்பூசி விநியோகத்தில் கடும் சரிவு எதிர்கொள்ளப்பட்டாலும் September இறுதிக்குள் கனடாவில் தடுப்பூசிகளை பெற விரும்பும் அனைத்து கனடியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் பிரதமர் Trudeau கூறினார்.