தேசியம்
செய்திகள்

கனடாவுக்குள் நுழைய முயன்ற 30,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

COVID தொற்றின் காலத்தில் கனடாவுக்குள் நுழைய முயன்ற 30,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை இதுவரை திருப்பி அனுப்பியுள்ளதாக கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டிய பயணகளுக்கு மேலும் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மத்திய அரசு அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

எல்லை சேவைகள் நிறுவனத்தின் தரவுகளின் பிரகாரம் கடந்த வருடம் March மாதம் 22ஆம் திகதி முதல் இந்த வருடத்தின் January மாதம் 6ஆம் திகதி வரையான காலத்தில் கனடாவுக்குள் நுழைய முயன்ற 30,475 வெளிநாட்டினரை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர் .

கனடியர்கள் வெளிநாடுகளுக்கான பயணங்களுக்கான திட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என அண்மையில் பிரதமர் Justin Trudeau கோரியிருந்தார். அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு முழுமையான தடையை விதிக்க வேண்டும் என அண்மையில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மாகாணங்களின் முதல்வர்கள் கனடிய பிரதமரை பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

27 வருட நாடாளுமன்ற உறுப்பினர் அரசியலில் இருந்து ஓய்வு

Lankathas Pathmanathan

RCMP புதிய ஆணையர் பதவியேற்பு

Lankathas Pathmanathan

Air Canada இந்த வாரம் விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை?

Lankathas Pathmanathan

Leave a Comment