Torontoவிலும் அதன் பெரும்பாகத்திலும் பனிப்பொழிவு ஏற்படும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது. இதனால் Toronto பெரும்பாகத்திற்கான ஒரு குளிர்கால பயண ஆலோசனை தற்போது நடைமுறையில் உள்ளது.
நேற்றிரவு (திங்கள்) இந்த வானிலை ஆலோசனை வழங்கப்பட்டது. Toronto பெரும்பாகத்தில் இன்று (செவ்வாய்) ஐந்து முதல் பத்து சென்றி மீற்றர் வரை பனிப்பொழிவு ஏற்படும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது. வேறு சில பகுதிகளில் 15 சென்றி மீற்றர் வரை பனிப்பொழிவு ஏற்படும்.
இன்று காலை ஆரம்பிக்கும் பனி இரவு வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Torontoவின் மேற்கில், ஒரு பனிப்பொழிவு எச்சரிக்கை அமுலில் உள்ளது. Mississauga, Brampton, Burlington, Oakville, Halton Hills,Milton ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் உள்ளது. இந்தப் பகுதிகளில் சுமார் 15 சென்றி மீற்றர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.