தேசியம்
செய்திகள்

பதவி விலகினார் கனடாவின் ஆளுநர் நாயகம்

கனடாவின் ஆளுநர் நாயகம் Julie Payette தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஆளுநர் நாயக மாளிகையில் பணியிட துன்புறுத்தல் விசாரணையின் அறிக்கையைத் தொடர்ந்து இவர் தனது பதவியில் இருந்து விளக்கியுள்ளார். தனக்கு எதிரான பணியிட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்த ஒரு சுயாதீன ஆய்வு முடிந்துள்ள நிலையில் இவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இவரது பதவி விலகலை பிரதமர் Justin Trudeau ஒரு அறிக்கை மூலம் உறுதிப்படுத்தினார். இடைக்கால அடிப்படையில், கனடாவின் தலைமை நீதிபதி ஆளுநர் நாயகத்தின் கடமைகளை நிறைவேற்றுவார் என பிரதமர் தெரிவித்துள்ளார்

இவருக்கான மாற்றீடு குறித்த பரிந்துரை அறிவிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

Related posts

தெற்கு Ontarioவில் பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

முதலாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா

Lankathas Pathmanathan

ஹவாய்க்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்!

Lankathas Pathmanathan

Leave a Comment