Toronto நகர சபைக்கு முன்பாக உள்ள Toronto என்ற அடையாள எழுத்துக்கள் சிவப்பு, மஞ்சள் நிறங்களில் ஒளியூட்டப்படவுள்ளன.
இன்று Toronto நகர சபைக்கு முன்பாக உள்ள Toronto என்ற அடையாள எழுத்துக்கள் சிவப்பு, மஞ்சள் நிறங்களில் ஒளியூட்டப்படவுள்ளன. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த சிறப்பு நகர்வை Toronto நகர முதல்வர் John Tory ஏற்பாடு செய்துள்ளார்.
தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடும் Toronto வாழ் தமிழ் மக்களிற்கு நகர முதல்வர் Tory தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். COVID-19 பெரும்பரவல் நோய்க்கு எதிராகப் போராடும் வேளையில் எமது நன்றியறிதலையும், நன்றிக் கடனையும் தெரிவிக்கும் முக்கியத்துவத்தினையும் Tory தனது வாழ்த்தில் முன்னிலைப்படுத்திக் கோடிட்டுக் காட்டியுள்ளார். இம்முறை வித்தியாசமான முறையில் வீட்டிலுள்ளவர்களுடன் மட்டும் பொங்கலை கொண்டாடுமாறும், பாதுகாப்பான முறையில் வீட்டிலே இருந்தப்படி மற்றவர்களுடன் மெய்நிகர் மூலமும் கொண்டாடுமாறும் நகர முதல்வர் Tory வலியிறுத்தியுள்ளார்.
தை மாதம் உத்தியோகபூர்வமாகத் தமிழ் மரபுத் திங்கள் மாதமாக Ontarioவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது