Ontarioவில் இன்று (வியாழன்) புதிய COVID நடவடிக்கைகள் குறித்த அறிவித்தல் ஒன்று வெளியாகவுள்ளது.
மாகாண முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிடவுள்ளார். இந்த அறிவித்தல் Toronto, Peel பிராந்தியம், York பிராந்தியம் ஆகிய பகுதிகளில் முழுமையான முடக்கமாக இருக்கலாம் என எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது.
இது மாகாணத்தின் தொற்றுக்கான பரவல் கட்டுப்பாட்டில் மிக முக்கியமான முடிவாக அமையும் என முதல்வர் Ford அறிவித்தார். நாளாந்தம் அதிகரித்து வரும் நோய்த் தொற்றுகள் மற்றும் இறப்புகளுக்கு மத்தியில் COVID பரவுவதைத் தடுக்க உதவும் புதிய நடவடிக்கையாக இது அமையுமெனவும் முதல்வர் Ford கூறினார்.
குறிப்பாக Toronto, Peel பிராந்தியம், York பிராந்தியம் ஆகியவற்றில் அதிகரித்துவரும் தொற்றுக்களின் எண்ணிக்கையை எதிர்கொள்வது சிக்கலானதுடன் அவசியமானது எனவும் Ford சுட்டிக்காட்டினார். இந்தப் பகுதிகளில் தொற்று ஆபத்தான விகிதத்தில் பரவுவதாகக் கூறிய முதல்வர், தற்போதைய நிலையில் இந்தப் பகுதிகளில் முழுமையான முடக்கம் சாத்தியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய அறிவித்தல் மதியம் 1 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் வெளியாகவுள்ளது.