கனடாவில் COVID தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இன்றைய (செவ்வாய்) அதிகாலை புள்ளி விபரங்களின் பிரகாரம் 200,052 பேர் இந்த தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
நேற்று நாடளாவிய ரீதியில் மொத்தம் 3,422 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 29 மரணங்களும் நேற்று அறிவிக்கப்பட்டன. கனடாவில் இதுவரை 240,263 அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 10,208 மரணங்களும் பதிவாகியுள்ளன.
நேற்றைய தரவுகளின் பிரகாரம், Ontario மீண்டும் அதிகளவிலான ஏழு நாள் சராசரியான தொற்றுக்களை பதிவு செய்தது. நேற்று புதிதாக 948 தொற்றுகள் Ontarioவில் பதிவாகின. இதன் மூலம் Ontarioவின் ஏழு நாள் சராசரியான தொற்றுக்களின் எண்ணிக்கை 919 என பதிவாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் Quebec மாகாணம் 108,018 தொற்றுக்களை பதிவு செய்துள்ளது. அதற்கு அடுத்த படியாக Ontario 77,655 தொற்றுக்களை பதிவு செய்துள்ளது.