புதிய குடியேற்றம் மூலம் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை (30) கனடிய அரசு அறிவித்தது.
2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான குடிவரவு நிலைகள் திட்டத்தை குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Marco Mendicino வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இந்தத் திட்டம் கனடிய பொருளாதாரம் COVID தொற்றிலிருந்து மீளவும், எதிர்கால வளர்ச்சியை உருவாக்கவும் உதவும் வகையில் அமைந்துள்ளது
தொற்று நோய் அதிகரிக்கின்ற போதிலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் குடியேற்றத்தை அதிகரிக்க கனடா முற்படுகின்றது. அடுத்த ஆண்டு நான்கு இலட்சத்திற்கும் அதிகமான புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை அனுமதிக்க கனடா திட்டமிட்டுள்ளது. இது ஒரு வரலாற்று எண்ணிக்கையிலான புதியவர்களின் அனுமதியாகும்.