COVIDக்கான விரைவு சோதனைகளின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்துள்ளது.
கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். 100,000 விரைவு சோதனைகள் கனடாவை வந்தடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார். கிடைக்கப்பட்ட விரைவு சோதனைகள் மாகாணங்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.
ஆனாலும் எந்த மாகாணங்கள் இந்த விரைவு சோதனைகளை முதலில் பெறுகின்றன என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதனையும் அமைச்சரின் அலுவலகமோ கனடியச் சுகாதாரத் திணைக்களமோ வெளியிடவில்லை