கனடாவில் செவ்வாய்கிழமையுடன் (20) 203,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் செவ்வாய்கிழமை மாத்திரம் மொத்தம் 2,343 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இதுவரையிலான தொற்றுக்களின் மொத்த எண்ணிக்கை 203,688 என பதிவாகியுள்ளது.
Ontario புதிய தொற்றுகளின் எண்ணிக்கையில் செவ்வாய்கிழமை மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. Ontarioவில் செவ்வாய்கிழமை 821 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. Ontarioவில் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்குள் நகர்ந்துள்ள நான்கு பகுதிகளில் செவ்வாய்கிழமை பெரும்பாலான தொற்றுகள் பதிவாகியுள்ளன. Torontoவில் 327, Peel பிராந்தியத்தில் 136, Ottawaவில் 79, York பிராந்தியத்தில் 64 என Ontarioவில் தொற்றுகள் பதிவாகியுள்ளன. Ontario கடந்த பல வாரங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சோதனையாக 24 ஆயிரம் சோதனைகளை மாத்திரம் கடந்த 24 மணிநேரத்தில் நிறைவு செய்தது.
தவிரவும் Quebecகில் 877, Albertaவில் 323, British Columbiaவில் 167, Manitobaவில் 110, Saskatchewanனில் 44, Prince Edward தீவில் 1 என செவ்வாய்கிழமை தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. Quebecகில் 12, Ontarioவில் 3, British Columbiaவில் 1, Albertaவில் 1 என COVID தொடர்புடைய மரணங்களும் செவ்வாய்கிழமை பதிவாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் இதுவரை 9,794 மரணங்கள் பதிவாகியுள்ளன.