கனடா 200,000 COVID தொற்றுக்கள் என்ற எண்ணிக்கையை அண்மிக்கின்றது. ஞாயிற்றுக்கிழமை (18) 1,827 புதிய தொற்றுக்கள் கனடாவில் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இதுவரையிலான மொத்த தொற்றுக்களில் எண்ணிக்கை 198,151 என பதிவாகியுள்ளது.
தொடர்ந்தும் முன்னிலை வகிக்கும் Quebec
Quebec தொடர்ந்தும் அதிக எண்ணிக்கையிலான தொற்றுக்களை பதிவு செய்து வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின. ஞாயிற்றுக்கிழமை Quebec மாகாண சுகாதார அமைச்சர் Christian Dube1,094 தொற்றுக்களை பதிவு செய்தார்.
Ontarioவின் நான்கு பகுதிகள் இரண்டாம் நிலை கட்டுப்பாட்டுக்குள்
Ontario நாடளாவிய ரீதியில் இரண்டாவது அதிகளவிலான தொற்றுக்களை பதிவு செய்கின்றது. இந்த நிலையில் Ontarioவின் நான்கு பகுதிகள் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகர்ந்துள்ளன. ஏற்கனவே Ontarioவில் Toronto, Ottawa, Peel பிராந்தியம் ஆகிய மூன்று பகுதிகளும் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுள் இருந்தன. இந்த நிலையில் York பிராந்தியத்தில் அணமைய நாட்களில் அதிகளவிலான தொற்றுக்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க மாகாண அரசாங்கம் முடிவு செய்தது. இதன் எதிரொலியாக குறைந்தது 28 நாட்களுக்கு York பிராந்தியம் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் நகர்ந்துள்ளது.
தொற்றை எதிர்த்து ஒற்றுமையாக செயல்படுங்கள்
இந்த நிலையில் பொது சுகாதார அதிகாரிகள் கனடாவை தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் ஒற்றுமையாக செயல்படுமாறு கனடியர்களை வலியுறுத்தினர்.கனடா முழுவதையும் மெதுவாக மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதே சவால் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கனடாவில் 9,760 COVID தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.