Ontarioவின் York பிராந்தியம் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகரவுள்ளது .
எதிர்வரும் திங்கள்கிழமை (19) முதல் York பிராந்தியம் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலைக்கு நகரும் என Ontario முதல்வர் Doug Ford வெள்ளிக்கிழமை (16) அறிவித்தார்.
York பிராந்தியத்தில் அணமைய நாட்களில் அதிகளவிலான தொற்றுக்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது. குறைந்தது 28 நாட்களுக்கு York பிராந்தியம் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகரவுள்ளது.
ஏற்கனவே Ontarioவில் Toronto, Ottawa, Peel பிராந்தியம் ஆகிய மூன்று பகுதிகளும் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது