அடுத்த வாரத்திற்குள் கனடாவில் மேலும் ஆயிரக் கணக்கான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகலாம் என மதிப்பிடப்படுகின்றது.
கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இன்று (09) இந்தத் தகவலை வெளியிட்டார். கனடாவில் அடுத்த வாரத்திற்குள் 198,000க்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகலாம் எனவும் 9,800 மரணங்கள் நேரலாம் எனவும் வைத்தியர் Tam எச்சரித்தார்
இந்த நிலையில் கனடா இந்த தொற்று நோயின் ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது என பிரதமர் Justin Trudeau கூறினார். நேற்று (08) கனடாவில் மிக அதிகமான நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.