இன்று (சனிக்கிழமை) முதல் Toronto, Ottawa, Peel ஆகிய மூன்று பிராந்தியங்களும் குறைந்தது 28 நாட்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகர்கின்றன.
நேற்று (வெள்ளிக்கிழமை) Ontarioவில் அதிகளவிலான ஒரு நாள் COVID தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ள நிலையில் இந்த நகர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்று (09) Ontarioவில் 939 தொற்றாளர்கள் பதிவாகினர்.
இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய நேரங்களில் வீட்டிலேயே இருக்குமாறு Ontarioவில் மாகாண ரீதியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Ontarioவில் அதிகளவிலான தொற்றாளர்கள் அறிவிக்கப்படும் மூன்று பிராந்தியங்களில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இன்று (10) நள்ளிரவு 12:01 முதல் Toronto, Peel பிராந்தியம் Ottawa ஆகிய பகுதிகளில் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. 28 நாட்களுக்கு இந்தக் கட்டுப்பாட்டுகள் அமுலில் இருக்கும் என மாகாண அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பிராந்தியங்களிலும் உள்ளக உணவகங்கள், உடல் பயிச்சி நிலையங்கள், திரையரங்கள் 28 நாட்களுக்கு மூடப்படவுள்ளன.