Florida மாநிலத்திற்கு பயணங்களை தவிர்க்குமாறு கனடியர்களிடம் வலியுறுத்தல்
அமெரிக்காவின் Florida மாநிலத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கனடியர்கள் வலியுறுத்தப்படுகின்றனர். Milton சூறாவளி Florida மாநிலத்தை நெருங்கி வரும் நிலையில், இந்த எச்சரிக்கை வெளியானது. முழு தீபகற்பத்திற்கும் இந்த பயண எச்சரிக்கையை கனடிய அரசாங்கம் வெளியிட்டது.