Ontario மாகாண சபைத் தேர்தலில் Liberal கட்சித் தலைவர் தவிர ஏனைய பிரதான கட்சிகளின் தலைவர்கள் வெற்றியடைந்தனர்.
வியாழக்கிழமை (27) Ontario மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது.
இதில் போட்டியிட்ட கட்சித் தலைவர்களில், Liberal கட்சி தவிர ஏனைய பிரதான கட்சிகளின் தலைவர்கள் வெற்றியடைந்தனர்.
Etobicoke வடக்கு தொகுதியில் Progressive Conservative தலைவர் Doug Ford வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.
Davenport தொகுதியில் NDP தலைவர் Marit Stiles வெற்றி பெற்று மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார்.
Mississauga East – Cooksville தொகுதியில் Liberal தலைவர் Bonnie Crombie 1,200 வாக்குகளால் தோல்வியடைந்தார்.
இதனால் அவர் மீண்டும் மாகாணசபை செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.
பசுமை கட்சி தலைவர் தலைவர் Mike Schriener, Guelph தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.