February 22, 2025
தேசியம்
செய்திகள்

B.C. தெற்கு பகுதியை தாக்கிய நிலநடுக்கம்

British Colombia மாகாணத்தின் தெற்கு பகுதியை மிதமான நிலநடுக்கம் தாக்கியது.

வெள்ளிக்கிழமை  (21) பிற்பகல் பதிவான இந்த நிலநடுக்கத்தில் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது.

இது Vancouver பகுதி, Vancouver தீவு முழுவதும் குறிப்பிடத்தக்க அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இதன் போது தங்கள் கால்களுக்குக் கீழ் நிலம் நகர்வதை தங்களால் உணர முடிந்தது என குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கத்தின் விளைவாக எதிர்பார்க்கப்படும் சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related posts

அகதி தஞ்சம் கோரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு?

Lankathas Pathmanathan

கனேடியர்களுக்கு தடுப்பூசி கடவுச்சீட்டு எளிய முறையில் அமையும்: பிரதமர் Trudeau

Gaya Raja

கனடாவில் COVID தொடர்பான இறப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியது

Lankathas Pathmanathan

Leave a Comment