February 21, 2025
தேசியம்
செய்திகள்

Pearson விமான நிலைய விபத்தில் காயமடைந்த இருவர் தொடர்ந்தும் மருத்துவமனையில்

Pearson விமான விபத்தில் காயமடைந்தவர்களில் இருவரைத் தவிர ஏனைய அனைவரும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்த விசாரணை தொடரும் நிலையில் இந்த தகவல் செவ்வாய்க்கிழமை (18)  வெளியானது.

திங்கட்கிழமை (17)  80 பேருடன் பயணித்த Delta விமானம் Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானதில் 21 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 பேர் என செவ்வாய் காலை ஒரு சமூக ஊடக பதிவில், Delta விமான சேவை உறுதிப்படுத்தியது.

இந்த விபத்து காரணமாக விமான நிலையத்தின் ஐந்து ஓடுபாதைகளில் இரண்டு செவ்வாய் காலை மூடப்பட்டிருந்தது.

இதனால் எதிர்வரும் நாட்களில் விமான நிலையத்தில் மேலும் தாமதங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விபத்து குறித்த விசாரணைக்கு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில் Pearson விமான நிலையத்திற்கான தமது விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக Delta விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளான Albertaவின் தொற்று நிலை!

Gaya Raja

தமிழ் பெண் கொலை குற்றச்சாட்டு விசாரணையை எதிர்கொள்ளும் கணவன்

Lankathas Pathmanathan

வெள்ளிக்கிழமை 41 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment