தேசியம்
செய்திகள்

Doug Ford அமெரிக்கா பயணம் – கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்

Ontario மாகாண முதல்வர் Doug Ford அமெரிக்கா தலைநகருக்கு பயணம் மேற்கொள்கிறார்.
கனடாவின் முதல்வர்களின் குழுவை தலைமை தங்கி இந்த மாத இறுதியில் இந்த பயணத்தை Doug Ford முன்னெடுக்கவுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் இந்த பயணம் பொருத்தமானதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்த பயணத்தின் மூலம் Doug Ford தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
முதல்வரின் அமெரிக்கா தலைநகருக்கான பயணம் முக்கிய தேர்தல் விதிமுறையை மீறுவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
கனடிய பொருட்களுக்கு எதிராக வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு எதிரான கனடிய முதல்வர்களின் பதில் நடவடிக்கைக்கு Doug Ford தலைமை தாங்குகிறார்.
ஆனால் சாதகமான மக்கள் கருத்து கணிப்பு ஆதரவின் மத்தியில் அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்களை காரணமாக்கி தான் விரும்பிய தேர்தலை நடத்துவதாக Doug Ford மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Related posts

கனடாவில் தமிழறிஞர் G.U. Pope நினைவுச் சிலை

அனுமதி மறுக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகள் கனடாவுக்குள் நுழைவதை தடை செய்ய நடவடிக்கை

Floridaவில் தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு கனடியர்கள் பலி: கனடிய வெளிவிவகார அமைச்சு!

Gaya Raja

Leave a Comment