தேசியம்
செய்திகள்

அமெரிக்காவின் மாநிலமாக மாறினால் கனடியர்களுக்கு மிகச் சிறந்த சுகாதார பாதுகாப்பு கிடைக்கும் : Donald Trump

கனடா அமெரிக்காவின் 51 வது மாநிலமாக மாறினால் கனடியர்களுக்கு மிகச் சிறந்த சுகாதார பாதுகாப்பு கிடைக்கும் என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார்.

வடக்கு Carolinaவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்த கருத்துக்களை வெள்ளிக்கிழமை (24) தெரிவித்தார்.

கனடா அமெரிக்காவின் 51 வது மாநிலமாக இருப்பதைக் காண நான் விரும்புகிறேன் என அவர் கூறினார்.

இது நடந்தால், கனடியர்களுக்கு மிகப்பெரிய வரி குறைப்பு கிடைக்கும் என Donald Trump தெரிவித்தார்.

February 1 முதல் கனடாவின் இறக்குமதிக்கு  25 சதவீத வரி விதிக்கப்படும் என  Donald Trump அறிவித்து வருகிறார்.

ஆனாலும் தனது எண்ணத்தின் படி கனடா  அமெரிக்காவுடன் இணைந்தால் கனடிய இறக்குமதிகளுக்கு  வரிகள் விதிக்கப்படாது எனவும் தெரிவித்தார்.

கனடிய வர்த்தக சபையின் தரவுகளின் படி நாளாந்தம், சுமார் 3.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது.

அமெரிக்கா-கனடா வர்த்தக உறவு இரு நாடுகளுக்கும் இடையிலான 3.7 மில்லியன் வேலைகளுடன் நேரடியாக தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Lankathas Pathmanathan

Vancouver கட்டுமானப் பணி விபத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan

இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ஆரம்பித்த Air Canada

Lankathas Pathmanathan

Leave a Comment