மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தகம் குறித்து பிரதமரும், மாகாண முதல்வர்களும் உரையாடியுள்ளனர்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.
புதன்கிழமை (22) இந்த உரையாடல் நிகழ்ந்ததாக தெரியவருகிறது.
கனடிய பொருளாதாரத்தை உயர்த்தும் ஒரு வழிமுறையாக இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.
புதன் காலை பிரதமர் தலைமையில் நடந்த மெய்நிகர் சந்திப்பின் ஒரு பகுதியாக இந்த விடயம் உரையாடப்பட்டது.அமெரிக்காவின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு கனடாவின் பதில் நடவடிக்கை குறித்து கடந்த வாரம் நடந்த முதல்வர்கள் சந்திப்பின் தொடர் சந்திப்பாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு February 1 முதல் வரி விதிக்கப்படும் என Donald Trump தெரிவித்துள்ளார்.